அருள்நிதியுடன் ‘சார்பாட்டா பரம்பரை’ நாயகி: இவர் தான் இயக்குனர்!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதியின் அடுத்த படத்தில் ’சார்பட்டா பரம்பரை’ நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அருள்நிதி தற்போது டைரி, டி பிளாக் மற்றும் தேஜாவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் விரைவில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இந்த நிலையில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தை கௌதம் ராஜ் என்பவர் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ’ராட்சசி’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக ’சார்பட்டா பரம்பரை’ நாயகி துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படம் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.