கலக்கும் லோகேஷ் கனகராஜ்

தமிழ்த் திரையுலகில் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இடம் பெற்றுவிட்டார். “மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்’ என அவர் இயக்கிய நான்கு படங்களுமே ஹிட் படங்களாக அமைந்துவிட்டன.

தான் இயக்கிய இரண்டு படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான விஜய், கமல்ஹாசன் ஆகியோரை அடுத்தடுத்து இயக்கி அப்படங்களையும் கூட சூப்பர் ஹிட்டாக்கிவிட்டார். ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார் லோகேஷ். அதற்கடுத்து கார்த்தி நடிக்க உள்ள ‘கைதி 2’ படத்தை இயக்கப் போகிறார். இவை இரண்டு உறுதி செய்யப்பட்டுவிட்ட படங்கள்.

அதற்குப் பிறகு ‘விக்ரம் 3’ படத்தை இயக்க வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே கமல்ஹாசன் ‘விக்ரம் 3’ படத்தின் இயக்குனர் லோகேஷ் தான் என அறிவித்துவிட்டார். அடுத்து இயக்க உள்ள மூன்று படங்களுமே முக்கியமான முன்னணி நடிகர்களின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் இப்போதைய இயக்குனர்களில் நம்பர் 1 இடத்தில் உள்ளவர் லோகேஷ் தான் என கோலிவுட்டில் புகழ்கிறார்கள். வினியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் பொறுத்தவரையில் லாபத்தைக் கொடுக்கும் படங்களின் இயக்குனர்கள்தான் டாப் இயக்குனர்கள். அந்த விதத்தில் நான்கு ஹிட்களைக் கொடுத்த லோகேஷ் டாப் இயக்குனர்தான்.