3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா விக்ரம்..KGF 2-விற்கு செக்

தமிழ் சினிமா பல மாதங்களாக எதிர்ப்பார்த்த மாஸ் ஹிட் வந்துவிட்டது.

விக்ரம் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கமல் பெற்றுவிட்டார். அதோடு தமிழ் சினிமாவும் தற்போது கம்பீரமாக அமர்ந்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படம் தமிழகத்தில் ரூ 65 கோடி வரை முதல் 3 நாட்களிலேயே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த கே.ஜி.எப் 2 படத்தின் வசூலை இன்னும் சில நாட்களில் முந்திவிடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதோடு பாகுபலி 2 தமிழக வசூலான 150 கோடியை விக்ரம் தாண்டும் என்றே கூறப்படுகிறது.