தனுசுக்கு ஜோடியாகும் கிருத்தி ஷெட்டி!

தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பெனா என்ற படத்தில் வைஷ்ணவ் தேஜ்க்கு ஜோடியாக நடித்தவர் கிருத்தி ஷெட்டி. தற்போது தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கி வரும் தி வாரியர் என்ற படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதையடுத்து தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 41வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் என்ற படத்திலும் கமிட்டாகி உள்ளார் கிருத்தி ஷெட்டி.

இந்த படத்தில் பிரியங்கா மோகன் தான் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமாக பிரியங்கா மோகன் விலகிக்கொள்ள, இப்போது அந்த வேடத்திற்கு கிருத்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.