சமந்தாவின் லேட் நைட் டேட்டிங் சென்ற நபர்கள் யார் தெரியுமா?

தெலுங்கில் யசோதா, சாகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இதில் சாகுந்தலம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

தற்போது சிவா நிர்வாணா இயக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா.

இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. அதேபோல் சமந்தா நடித்து வரும் இன்னொரு படமான யசோதா ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வெளியாகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு நடுவே அவ்வப்போது தான் டேட்டிங் செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார் சமந்தா. அது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது நெருக்கமான நண்பர்களாக பிரீதம் ஜூகல்கர், சாதனா சீங் ஆகியோருடன் லேட் நைட்டில் தான் டேட்டிங் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர்களுடன் தான் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் சமந்தா.