காஷ்மீரிலும் விடாது உடற்பயிற்சி செய்யும் சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் யசோதா, சாகுந்தலம் என்ற இரண்டு படங்களில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதுதவிர தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய ஹாலிவுட் தொடரிலும் நடிக்கப் போகிறார். இந்நிலையில் தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீரில் முகாமிட்டுள்ளார் சமந்தா.

அங்கும் தனது வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார் சமந்தா.

அந்த வீடியோவில் அவரது பயிற்சியாளர் உதவியுடன் ஸ்குவாட் ஒர்க் கவுட் செய்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு எங்கு சென்றாலும் இந்த ஒர்க்அவுட்டை மட்டும் விடுவதில்லை என்ற முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.