நாகசைதன்யா அதற்குள் இரண்டாவது திருமணமா?

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி நான்கு ஆண்டுகளில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். தற்போது இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும் சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. அந்த செய்திக்கு ஒரு விளக்கம் அளித்திருக்கிறார் நாகசைதன்யா.

அவர் கூறுகையில், ‛‛சமந்தாவும் நானும் இன்னும் சட்டப்படி பிரியவில்லை. ஆனால் அதற்குள்ளாக நான் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்திகள் வெளியாகி வருவது வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார் நாகசைதன்யா.