ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை பதிவிட்டு திரைப்பட பாடலுக்கு விளம்பரம் தேடிய படக்குழு..!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா என்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகியது. இதற்கு முன் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியாகிய “டூ டூ டூ ” பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் தொடர்பான சில நொடி வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்த நிலையில் தற்போது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இன்று நடந்த ஐபிஎல் போட்டியை வைத்து இந்த திரைப்படத்திற்கு விளம்பரம் செய்துள்ளது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. ஜாஸ் பட்லர் சதம் அடித்து அசத்தினார்.
Alexa, Play 'Two Two Two' from #KaathuvaakulaRenduKaadhal 🥳
Thank You @rajasthanroyals for giving a Tribute to us 😉@josbuttler @ashwinravi99 @IamSanjuSamson #DCvRR #JosButtler pic.twitter.com/JCO6FPO5Sd
— Rowdy Pictures (@Rowdy_Pictures) April 22, 2022
இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை பதிவிட்டு படத்தின் “டூ டூ டூ ” பாடலை நினைவு கூர்ந்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.