பிகினியில் அனன்யாவின் கவர்ச்சி

பிரபல இளம் நடிகை அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்ளும் அனன்யா, இஷான் கட்டருடன் காதலில் இருப்பதாக பேசப்பட்டது.

தற்போது இவர் பூரி ஜெகன்னாத் இயக்கும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி நடிகர் என்று அனன்யா பாண்டே கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

இதற்கிடையில் அனன்யா பாண்டே போதை பொருள் வழக்கில் சிக்கி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப் பொருள் வழக்கில் அவருடன் போதைப்பொருள் பற்றிய உரையாடலில் ஈடுப்பட்டதாக கூறி அனன்யா மீது வழக்கு பதியப்பட்டது.

சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி உடையில் வலம் வந்து ரசிகர்களை கவரும் அனன்யா பாண்டே, தற்போது பிகினியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பிகினி உடையில் கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.