கமலின் விக்ரம் படத்தில் அமிதாபச்சன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், பிக்பாஸ் ஷிவானி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த விக்ரம் திரைப்படமானது வருகின்ற ஜூன் மாதம் 3 ஆம் திகதி திரை அரங்கிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கதைப்படி இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ஒரு திருப்புமுனை தரும் வேடத்தில் அமிதாப்பச்சன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரே நாளில் லோகேஷ் கனகராஜ் படமாக்கி முடித்து விட்டாராம். தற்போது திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாகியுள்ளன.