‛அஜித் 62′ பற்றி விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி

வலிமை படத்தை அடுத்து மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் ஓர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.அஜித்தின் 61 ஆவது திரைப்படத்தினை போனி கபூரே தயாரிக்க, ஐதராபாத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் பற்றிய உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தினை குறித்தான தகவல்கள் வெளியாகின.

முதன்முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க போகிறார். இதற்கான அறிவிப்பை திரைப்படத்தினை தயாரிக்கும் லைகா நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் குறித்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும், மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தாண்டு இறுதியில் டிசம்பர் மாதம் துவங்கும் என்றும், அடுத்தாண்டு மத்தியில் திரையரங்குகளில் ரிலீஸாகும் எனவும் கூறியுள்ளனர்.

முதன் முறையாக நடிகர் அஜித் படத்தை இயக்கவுள்ளதினை பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறுகையில், ‛‛எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும். காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்போது தான் நடிகர் அஜித் படத்தை முதன்முறையாக இயக்க போகிறார் என்றாலும் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால், வலிமை உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். குறிப்பாக என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு உதாரு பாடலின் வரிகளை இப்போது மேலே தனது மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.