மகன் பிறந்தநாள் – குடும்பத்தினருடன் அஜித் கொண்டாட்டம் : வைரல் போட்டோ

நடிகர் அஜித் நடிப்பில் கடந்தவாரம் ‛வலிமை‛ படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் படத்தின் வசூல் சூப்பராக உள்ளது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து மீண்டும் அஜித் – வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகின்றனர். அடுத்தவாரம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது.

இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக்கிற்கு நேற்று பிறந்தநாள். இதை குடும்பத்தினர் உடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அஜித்.

ஒரு ஹோட்டலில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அங்கு மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் அஜித் மிகவும் ஸ்டைலாக உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.