பீம்பாய்-ஆக நடித்த பிரவீன் குமார் சோப்தி மறைவு!

மகாபாரதம் தொடரில் பீமனாக நடித்தவர் பிரவீன் குமார் சோப்தி. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கமலுடன் ‛மைக்கல் மதன காமராஜன்‘ படத்தில் பீம்பாய் வேடத்தில் கமலின் பாதுகாவலராக நடித்திருந்தார். மார்பு தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவர், மாரடைப்பால் தனது 74 ஆவது வயதில் காலமானார்.

நடிகராக மட்டுமின்றி விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த இவர் ஆசிய மற்றும் காமென்வெல்த் போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளார். எல்லை பாதுகாப்பு படையிலும் சில ஆண்டுகள் பணியாற்றிய பிரவீன் குமார் சோப்தி,  அரசியலிலும் ஈடுபட்டிருந்தார். பிரவீன் குமார் சோப்தியின் மனைவி மற்றும் மகள் ஆகியோரிற்கு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.