Oscar நாமினேஷன் பட்டியல் வெளியீடு!

இயக்குனர் T. J. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் இந்தியளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 94 ஆவது ஆஸ்கார் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் தேர்வாகியிருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் தற்போது கவலை அடைந்துள்ளனர்.