பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வித்தியாசமான வேடத்தில்!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராவார்.

அண்மையில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவி படத்தில் ஜெயலலிதாவை போல் நடித்து அசத்தியிருந்த நடிகை கங்கனா ரனாவத், தற்போது தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

லாக்கப் என்ற பெயரில் ஏக்தா கபூர் தயாரிப்பில் அறிமுகமாகி ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியொன்றை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதில் 16 விஐபிகளை தனியாக லாக்கப்பில் அடைத்து விடுவார்கள். அவர்களுக்கு போன், டிவி, கடிகாரம் என்று எதுவும் கொடுக்கப்படமாட்டாது. இந்தச் சூழலில் அவர்கள் பல மாதங்கள் இருப்பார்களாம். கிட்டதட்ட BiggBoss சாயலில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க உள்ளதால், நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.