சூப்பர்ஸ்டாரின் அடுத்த படம் – இயக்குனர் இவரா?! Update!!!

சூப்பர்ஸடார் ரஜினியின் அண்ணாத்த பட வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

சூப்பர்ஸடார் ரஜினியின் அடுத்த படத்தை, இயக்குனர் வெற்றிமாறன் இயக்க வாய்ப்புள்ளது என்று ஒரு பக்கம் கூற, மறுபக்கம் இயக்குனர் பால்கிக்கும் இதில் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றது சினிமா வட்டாரம்.

இந்நிலையில், புதிய update ஆக நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தற்போது தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் எனும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.