எஸ். ஜே. சூர்யாவின் சம்பள உயர்வு!

மாநாடு படத்தில் வில்லனாக களமிறங்கிய எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை பாராட்டாதவர் யாருமில்லை எனலாம். அப்படத்தில் அவரின் entryக்குப் போடப்பட்ட BGM பலரை ரசிக்க வைத்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு நல்ல நல்ல படக்கதைகள் வந்துகொண்டு இருக்கின்ற நிலையில், பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில், எஸ்.ஜே. சூர்யாவை தெலுங்கில் நடிக்க வைக்க  அணுகியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா அந்த படத்தில் நடிக்க ரூ. 7 கோடி சம்பளமாக கேட்டதாகவும், இதைக் கேட்ட தயாரிப்பாளர் அதிர்ச்சியற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.