தளபதி 66.. புதிய update!

இவ்வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 66 பட ஷூட்டிங் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

அவ்வகையிலே தற்போது இப்படத்தில் தளபதி விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களிலே வெளியாகும் தளபதி விஜய்யின் சமீபத்திய புகைப்படங்களை பார்க்கும் போது அவர் இதில் வயதான தோற்றத்தில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன் நடிகர்விஜய் பிகில், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.