“எதற்கும் துணிந்தவன்” கதை வேறொரு முக்கிய நடிகருக்காக எழுதியது!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்,  நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம், பிப்ரவரி மாதம் 4 ஆம் திகதியே வெளியாகி இருக்கவேண்டிய நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சில ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,  ET படத்தின் Trailer க்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் “சூர்யாவிற்காக பிரமாண்டமான கதை ஒன்றை எழுதியிருந்தேன், அப்படத்திற்காக பல மடங்கு உழைக்கவேண்டி இருந்தது. அந்த கதை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உட்பட அனைவரும் பிடித்திருந்தது.  ஆனால் கலாநிதி மாறன் சார் சூர்யாவை கிராமத்திற்கு கூட்டி செல்வோம் என எதற்கும் துணிந்தவன் கதையை சூர்யாவிற்காக தேர்வு செய்தார். பின் சூர்யாவிடம் ET கதையை கூற இப்படத்தில் பணியாற்றினோம்.  எதற்கும் துணிந்தவன் கதை வேறொரு நடிகருக்காக வைத்திருந்தது” என குறிப்பிட்டு இருந்தார் இயக்குனர் பாண்டிராஜ்.