தாடி பாலாஜியின் மீது நித்யா அதிர்ச்சி புகார்!

விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இடையே இருக்கும் பிரச்சினை அனைவருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் இருவரும் Biggboss 2 ஆம் சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டது, பின்பு சேர்ந்துவிட்டது போல இறுதியில் காட்டப்பட்டது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விடயமே!. ஆனால் அதற்கு பிறகும் அவர்கள் பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தற்போது BiggBoss Ultimate Show வில் பாலாஜி போட்டியாளராக சென்றிருக்கும் நிலையில், பாலாஜி தன் image ஐ damage செய்கிறார் என நித்யா புகார் கூறி இருக்கிறார். அவர் live வீடியோவில் இது பற்றி“பாலாஜி என்னுடைய character ஐ ரொம்ப அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இதை பற்றி பேசவேண்டிய கட்டாயம் என்ன இருக்கு. இனிமேலும் என்னைப்பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக அவர் அசிங்க அசிங்கமாக திட்டிய voice message ஐ வெளியிடுவேன். மகள் போஷிகாவை அவர் மிகவும் அசிங்கமாக திட்டி இருக்கும்  audio என்னிடம் இருக்கிறது. குடிச்சிட்டு அவருடைய driver ஐ வைத்து என்னை போனில் அசிங்கமாக திட்ட வைத்து, அவர் அருகில் சிரித்து மகிழ்ந்த  audio வும் என்னிடம் இருக்கிறது.”

“இனிமேலும் அவர் இப்படி பேசினால் நான் youtube ல் ஒவ்வொன்றாக வெளியிடுவேன். இதை நான் viewes பெறுவதற்காக செய்கிறேன் என நீங்க நினைக்கலாம், அப்படி எல்லாம் இல்லை. அவர் என் image ஐ damage செய்தால் நான் கண்டிப்பாக விடமாட்டேன். என்னை wild card entryயாக்கி அனுப்பினால் கூட அவரை வெச்சி செஞ்சிடுவேன். மகளை பிரிந்திருக்கிறேன் என அவர் நடித்து கொண்டிருக்கிறார். அதை வைத்து அவர் court இல் சாதகமாக பயன்படுத்திகொள்ளலாம் என பார்க்கிறார்” என நித்யா கூறி உள்ளார்.

மேலும் போஷிகா பேசும்போது “நீங்க (பாலாஜி)  media விற்காக மட்டும் இப்படி பண்ணாதீங்க. எது நல்லது எது கெட்டது என எனக்கு தெரியும் அளவுக்கு maturity வந்திருக்கிறது” என கூறி உள்ளார்.