சிவாஜி படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதன் முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் சிவாஜி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா, விவேக், சுமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கமெர்ஷியல் மற்றும் சமூக அக்கறை, நகைச்சுவை என பல விஷயங்கள் மூலம் மக்களின் மனதை கவர்ந்த சிவாஜி திரைப்படம் Box Office இல் ரூ. 152 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, சிவாஜி படம் தான், தமிழ் திரையுலகில் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.