”பிக் பாஸ் என்ன ஜெயிலா?!இந்த வாரமே வெளியே போறேன்” – வனிதா

பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கும் வனிதா தற்போது பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார். தனக்கு coffee வேண்டும் என தொடர்ந்து கேட்டு வரும் வனிதா அது தரப்படாததால் tea தூளை எடுத்து அவர் ஒளித்து வைத்துவிட்டார். இதனால் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அவருடன் தற்போது சண்டை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வனிதா ”தற்போது தனக்கு coffee தூள் தரப்படவில்லை என்றால் பிக் பாஸ் ஷோவை விட்டு போகவும் தயார்!” என கூறி இருக்கிறார் அவர். “இது என்ன ஜெயிலா. சுத்தமா responsibility இல்லை. நான் கடுப்பானால் இந்த வாரம் போய்விடுவேன்… இருக்கும் படங்களை விட்டுவிட்டு BB Ultimate இறுதி நாள் வரை இருக்கலாம் என்கிற நினைப்புடன் தான் show விற்கு வந்தேன், ஆனால் தற்போது அது மாறிவிடும் போல இருக்கிறது!” எனவும் கோபத்துடன் தெரிவித்து இருக்கிறார் வனிதா.