நடிகை லாவண்யாவிற்கு திருமணம் நடந்தது உண்மையா..?

சசிகுமார் நடிப்பில் வெளிவந்த பிரம்மன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாகியுள்ளார்.

லாவண்யா திரிபாதி அவ்வப்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்படியொருமுறை சமீபத்தில் ரசிகர்களுடன் அவர் உரையாடும் பொழுது, அவர் திருமணம் செய்துகொண்டது உண்மையா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.  ஆரம்பத்தில், ”எனது திருமணம் குறித்து வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை” என்று லாவண்யா திரிபாதி பொறுமையாக பதில் கூறினார்.

ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து அதுபற்றியே கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்ததால் கொஞ்சம் கடுப்பாகிய லாவண்யா ” என் திருமணம் பற்றி என்னைவிட ரசிகர்களாகிய உங்களில் பலருக்குத்தான் அதிக விபரம் தெரிந்திருக்கிறது ” என்று கூறிய பின்னரே ரசிகர்கள் அப்படி கேட்பதை நிறுத்தினார்கள்.