வைரலாகும் சினிமா பிரபலத்தின் சிறு வயது புகைப்படம்!

சமூக வலைதளத்தில் தற்போது  ஒரு முன்னணி பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் சைக்கிளின் மேல் அமர்ந்திருக்கும் இந்த குழந்தை, உலகளவில் பல சாதனைகளை படைத்த தமிழ் சினிமா பிரபலம். இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை, நம் பாடும் நிலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஆவார். இவர் தற்போது நம்முடன் இல்லையென்றாலும், இவர் பாடிய 40,000 பாடல்களும் நம் வாழ்க்கையோடு இணைந்தே இருக்கிறது.

எஸ். பி. பாலசுப்பிரமணியம் சிறு வயதில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அவரின் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.