தாடி பாலாஜியை கடுமையாக திட்டிய சுரேஷ் சக்கரவர்த்தி!

தற்போது ரசிகர்களிடையே பிரபலமாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ வில் தொடக்கத்திலிருந்தே போட்டியாளர்களிடையே வாக்குவாதம் எழும்படியான டாஸ்க்களையே பிக் பாஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது Celebrity Press Meet என்ற ஒரு டாஸ்க் நடந்து வருகிறது, இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் பிரபலங்களாகவும் பத்திரிகையாளர்களாகவும்  பங்குபற்றுகின்றனர்.

இதில் முதலில் பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர் தாடி பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தியிடம் ”சுரேஸ் அண்ணே! விடுங்க அதோட”  என்று கூற சுரேஷ் சக்கரவர்த்தி ”எவனாவது விடு  விடுனீங்கனா ஒரு விடு விடுவேன். ஜாக்கிரத! ” என கடுமையாக பேசியுள்ளார்.

இந்த BiggBoss Unlimited Show ஐ Disney Hotstar OTT இல் பார்வையிடலாம்.