AK 61 படத்தின் புதிய அப்டேட்!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் திகதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக AK 61 குறித்த தகவல் தான் தொடர்ந்து வெளியாகி வருகிறது, அதன்படி சமீபத்தில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரதிற்காக நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. மேலும் தற்போது தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவிடம் கூட AK 61 திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. நெகடிவ் ரோலில் அஜித் நடிக்கவுள்ள இப்படத்தில் அவரின் உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவே முக்கிய பெரிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.