விக்ரம் – தோனி சந்திப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் தான்  கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களை முடித்துள்ளார். மேலும் தற்போது அவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திள்ள மகான் திரைப்படமும் வரும் பிப்ரவரி 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இதனிடையே நேற்று, நுங்கம்பாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சியான் விக்ரம் மற்றும் தோனி ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருவரின் ரசிகர்களிடமு்ம  வைரலானது. ஏற்கெனவே ஹோட்டலில் இருந்த விக்ரம், தோனியை பார்த்ததும் ‘ஹாய்’ என கூறித் தொடங்கிய உரையாடல் 15 நிமிடங்கள் நீண்டது.

அப்போது விக்ரம் கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ள விஷயத்தை தோனியிடம் கூறியுள்ளார். பின் தோனி இர்பான் நடிப்பு குறித்தும் விக்ரமிடம் கேட்டு அறிந்திருக்கிறார்.