BiggBoss Ultimate களம் சூடுபிடிக்கிறது!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிக்பாஸை விட படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. காலை ”Celebrity Pressmeet” என்ற ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதில் பத்திரிகையாளர்கள், பிரபலங்களை பேட்டி எடுப்பது போல் இரண்டு அணிகளாக பிரிந்து pressmeet ஐ நடத்த வேண்டும்.

இதில் அபிராமி சில கேள்விகளை நிரூப்பிடம் கேட்க இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். வனிதா சினேகனை பார்த்து ”புது பொண்டாட்டியை விட்டு நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என கேட்க இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.