புஷ்பா படத்தில் சமந்தா நடனம் பற்றி நடிகை பிரியாமணி சொன்னது என்ன?!

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் பிரியாமணி. அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் “தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வருகின்றன. நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் ஒட்டுமொத்த படத்தையும் தங்களின் தோள்களில் சுமந்துவருகின்றனர்.

நடிகை நயன்தாரா நெற்றிக்கண் போன்ற சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.  புஷ்பா படத்தில் சமந்தாவின் கவர்ச்சி நடனம் ஆடியது அவரது தைரியமான முடிவு. அதை அவர் மிகவும் நன்றாக செய்திருந்தார்” என தெரிவித்துள்ளார்.