மீண்டும் 96!

பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகிய 96 திரைப்படம், பலருக்கு தங்கள் கதையே படமாக ஓடுகின்றதே.. என்று தோன்ற வைத்தது என்றால் அது மிகையாகாது. காரணம், மறந்து போனதாய் மறைத்து வைத்த பள்ளிப் பருவ காதலை இப்படி அப்பட்டமாய் திரை வழியே காட்டியாயிற்றே! என்ற உணர்வு தான். சொல்லாமல் போன காதலை சொல்லிவிட்ட திருப்தியை இத்திரைப்படத்தை பார்த்து முடித்த பலர் அனுபவித்திருந்தனர்.
அத்தகைய படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. ”நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே… இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே!, இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே… நாளை ஓர் அர்த்தம் காட்டுமே! ”  என்பது போலே நாளையொரு நாள் வெளியாகவுள்ள 96 Part 2 விற்காக காத்திருப்போம்.