ஆர்ஆர்ஆர், வலிமை ரிலீஸ் திகதி… சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்!

தற்போது கொரோனா ஊரடங்கு காலம் முடிவுக்கு வந்திருப்பதால், தியேட்டர்கள் மீதான கட்டுப்பாடுகளும் விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில் பல பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போன படங்கள் வரும் மாதங்களில் ரிலீஸ் ஆகவுள்ளன.

அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் ராஜமௌலியின் ”ஆர்ஆர் ஆர்” படம் மார்ச் 25 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். இதே தினத்தில் தான் சிவகார்த்திகேயனின் ”டான்” படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ”ஆர்ஆர்ஆர்” படம் வருவதால் டான் படம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. மேலும் சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்” படம் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வெளிவரும் என கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.