வனிதாவுக்கு முதல் நாளே நோஸ்கட்!

பிக் பாஸ் ஷோவில் இதுவரை முடிந்திருக்கும் ஐந்து சீசன்களில் அதிகம் சர்ச்சைகளை ஏற்படுத்திய போட்டியாளர்களை ஒன்று சேர்த்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி ஷோ தொடங்கப்பட்டு இருக்கிறது. நேற்று (30 ஆம் திகதி ஜனவரி மாதம் 2022) ஆரம்பமான பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என ரசிகர்கள் 24 மணி நேரமும் Disney Hotstar OTT இல் பார்க்கலாம்.

இவ்வாறிருக்க, இன்று முதல் நாளே போட்டியாளர்கள் நடுவில் பிரச்சனை தொடங்கி இருக்கிறது.  முதல் டாஸ்கில் வனிதா கோபித்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டு அதன் பின் மீண்டும் நான் கேமுக்கு வருகிறேன் என சொல்லி வருகிறார். ஆனால் ஷாரிக் அதை அனுமதிக்கமாட்டேன் என சொல்ல, உடனே வனிதா கொந்தளித்து கத்தி சண்டையிட்டுள்ளார். அதற்கு ”இது உங்கசொந்த வீடுனு நெனைச்சிக்கிட்டிங்க. நீங்க ஓனர் இல்லை, ஹவுஸ்மேட் தான்” என பாலாஜி முருகதாஸ் கூறி, வனிதாவிற்கு நோஸ்கட் கொடுத்திருக்கிறார்.