பிக் பாஸ் வீட்டில் புகைபிடித்த போட்டியாளர்கள்!

24 மணிநேரமும் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும்  பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல் முன்னிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது, இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் செய்த விஷயம் தற்போது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. புகைபிடிக்கும் அறையில் நிரூப், அபிநய், ஷாரிக் உள்ளிட்டோர் புகைபிடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் அபிராமியும் சேர்ந்து புகைபிடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.