பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்த முன்னாள் காதலர்கள்!

விஜய் டிவியில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல் முன்னிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. 24 மணிநேரமும் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை எந்தளவிற்கு கவரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இதனிடையே, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்து வருபவர்கள் தான் நிரூப் மற்றும் அபிராமி வெங்கடாச்சலம். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இவர்கள் இருவரும் முன்னாள் காதலர்கள் என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் இப்பொழுது இணையத்தில் வைரல்  ஆகி வருகிறது.