பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஆரம்பித்த உடனே புலம்பும் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே பிரபலமான பிரம்மாண்ட ஷோ. பிக்பாஸ் 5 ஆவது சீசன் கடந்த வருடம் 2021 இல் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு, இவ்வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அதற்குள் பிக்பாஸ் குழு, பிக்பாஸ் அல்டிமேட்  24 ஹவர்ஸ் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நேற்று (ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 2022) நிகழ்ச்சியை தொடங்கி விட்டனர். இந்த அல்டிமேட் ஷோ ஸ்பெஷல் என்னவென்றால் 24 மணிநேரமும் Disney Plus Hotstar இல் ஒளிபரப்பாகிறதாம்.

5 ஆவது சீசனில் கலந்துக்கொண்ட போட்டியாளர்களும், இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களும் தான் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளனர்.  வாய்ப்புக் கிடைப்பதே அரிது, அதிலும் இது இரண்டாவது வாய்ப்பு. ஆகவே இம்முறை போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், காலை 2 மணி நேரம் சினேகன் நடப்பதை மட்டுமே காண்பித்துள்ளார்களாம், மற்றவர்கள் அனைவரும் தூங்குகிறார்கள். இதனால் ரசிகர்கள் ”அப்போது 24 மணி நேரம் இப்படி தான் போகுமா?” என புலம்ப ஆரம்பித்துள்ளனர்.