கண்ணம்மா கொடுத்த அடுத்த ஷாக்!

பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த வாரத்திற்கான புரொமோ வந்துள்ளது, அதில் கண்ணம்மா ஆட்டோக்காரரின் தங்கை திருமணத்திற்கான பெண் பார்க்கும் விசேஷத்தில் கலந்துகொள்கிறார். அங்கு  கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர் இந்த சடங்குகளைக் செய்ய கூடாது என வந்தவர்கள் கண்ணம்மாவை அசிங்கப்படுத்துகின்றனர். அதற்கு கண்ணம்மா, ”இன்னும் நான்கு நாட்களில் எனது பிறந்தநாள் நிகழ்ச்சி, அன்று  லட்சுமியின் தந்தை யார் என்பதை கூறுவேன்!” என அதிரடியாக கூறுகிறார். இந்த பரபரப்பு புரொமோவை பார்த்த ரசிகர்கள் அடுத்து என்ன ஆகுமோ என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.