பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வைத்த அடுத்த ட்விஸ்ட்!

சென்ற வாரம் பாரதி கண்ணம்மா சீரியலின் பார்வையாளர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.  காரணம் பாரதி, கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டது, இருவரும் சேர்ந்து அகில் மற்றும் அஞ்சலி குழந்தையின் பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்டது என சந்தோஷமாக நகர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல், வாரத்தின் இறுதியில் பாரதி ஒரு டுவிஸ்ட் வைக்க வழக்கம் போல் கதை பழைய நிலைமைக்கே சென்றுவிட்டது.

தற்போது தொடரின் புதிய புரொமோ வந்துள்ளது, அதில் கண்ணம்மா பாரதியின்  பொருட்களை அவரின் வீட்டிற்கு வந்து கொடுக்கிறார். பின் சௌந்தர்யா இத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதா? என கேட்க அதற்கு கண்ணம்மா ”யார் முடிந்தது என்று சொன்னது, கூடிய விரைவில் நான் சுத்தமானவள், எனது குழந்தைக்கு அப்பா இவர்தான் என்பதை நிரூபிப்பேன்” என கூறிவிட்டு செல்கிறார்.