புதிய ஹேர் ஸ்டைலில் பிக் பாஸ் பாவனி!

பிக் பாஸ் 5 ஆம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, தனக்கென்று ஒரு தனி ஆர்மியே  கிடைக்கப்பெற்று  இரண்டாம் ரன்னர் அப் ஆக வந்தவர் நடிகை பாவனி ரெட்டி. இவருக்கு மக்கள் ஆதரவு சற்று அதிகம் இருந்தது.

இருப்பினும் ராஜு மற்றும் பிரியங்காவை விட அதிகம் வாக்குகள் அவரால் பெற முடியவில்லை. இந்நிலையில் பவானி தான் இனி சினிமாவில் மட்டும் நடிக்க போவதாகவும், சீரியல்களில் நடிக்கும் பிளான் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமின்றி இப்போது பாவனி முடியை கலர் செய்து புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார்.  புதிய ஹேர் ஸ்டைலில் பாவனி தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.