தனுஷுடனான விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா!

”இவரெல்லாம் ஒரு நடிகரா?” என்று ஆரம்பத்தில் பேசியவர்களை இப்போது வாய் பிளந்து அவரது அசாத்திய நடிப்பை பார்க்க வைத்து வருகிறார் நடிகர் தனுஷ். அந்த அளவிற்கு அவரது  புகழ் உச்சத்தை எட்டியுள்ளது, அடுத்தடுத்து தொடர்ந்து எல்லா மொழிகளிலும் மாற்றி மாற்றி நடிக்கிறார்.

அண்மையில் அவர் ஐஸ்வர்யாவுடனான 18 வருட தனது திருமண வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்ட நிலையில், அவர்களை பற்றி பேசுவதை விட தமிழக ரசிகர்கள் ரஜினிக்கு ஏன் இந்த வயதில் கஷ்டங்களை கொடுக்கிறீர்கள் என்று தான் பேசி வந்தார்கள்.

இருவரும் அவரவர் வேலையை செய்ய தொடங்கிவிட்டனர்.

ஐஸ்வர்யா ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இசை ஆல்பத்தை உருவாக்க இருக்கிறார். அந்த ஆல்பத்திற்கான பேச்சு வார்த்தை ஹைதராபாத்தில் நடந்துள்ளது. அதில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட ஐஸ்வர்யாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.