ஆளே மாறிவிட்ட சீரியல் நடிகர் ப்ரஜின்!

விஜய் டிவியில்  வைதேகி காத்திருந்தாள் என்ற தொடரில் நடித்து வருகின்ற நடிகர் ப்ரஜின் தற்போது அதே சேனலில் சின்னத்தம்பி என்ற தொடரில் நடித்து பிரபல்யம் அடைந்தவர். தற்போது ஹீரோவாக ஒரு படத்திலும் நடித்து வருகின்றார்.  அந்த படத்தில் வனிதா விஜயகுமாரும் ஒரு ரோலில் நடித்து வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு பூஜை நடந்த நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோ ஒன்றை தற்போது வனிதா வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது வித்தியாசமான கெட்டப்பினால்  ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகர் ப்ரஜின்.  ”இப்படி ஆளே மாறிட்டாரே!” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்ற நிலையில், மேலும் நீண்ட தாடி உடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கும் ஒரு போட்டோவை ப்ரஜின்  பதிவிட, அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.