முத்தம் கொடுத்த விவகாரத்தை எதற்கு பெரிதாக்குகிறீர்கள்?- பிக்பாஸ் 5 அமீர்

பிக்பாஸ் 5 ஆவது சீசனில் பங்குபெற்ற பல போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க் தான் தனது வாழ்க்கை கதைப் பற்றி எல்லோர் முன்னும் பகிர்ந்துக் கொள்வது! . இவ்வாறு கன்டஸ்டன்ட் ஒவ்வொருவரும் பகிர்ந்துக் கொண்ட  சொந்த விஷயங்கள் பார்வையாளர்களுக்கு கண்ணீர் வரவழைத்தது.

அந்த வகையில், நமீதா மாரிமுத்து, பாவ்னி, அமீர் போன்றவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு தற்போதைய இடத்திற்கு வந்துள்ளார்கள் என்பது தெரிய வந்தது. அமீர் நிகழ்ச்சியின் இடையில் தான் போட்டிக்குள் வந்தார்.  எனவே அவர் தனது பயணம் குறித்து தனியாக தான் பேசியிருந்தார். சில நாட்களில் அமீர்-பாவ்னி காதல் குறித்து நிறைய கிசுகிசுக்கப்பட்டது. அதனையடுத்து அமீர், பாவ்னிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் மக்களிடையே சர்ச்சையாக பேசப்பட்டது.

இது தொடர்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவிற்குப் பிறகு முதன்முறையாக  பேசியுள்ள அமீர், ”நான் பாவ்னிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கவில்லை, அப்படி கொடுத்திருந்தால் தான் பிரச்சனை ஆகி இருக்கும். அவர் தடுக்கவே இல்லை, அவருக்கு தெரிந்துதான் கொடுத்தேன். அப்போது இருந்த காதல் உணர்வில் கொடுத்துவிட்டேன், அதை எதற்கு பெரிதாக்குகிறீர்கள்? சர்ச்சையாக்குறீங்கள்?  நாங்கள் இப்போது வரைக்கும் நல்ல நண்பர்களாக உள்ளோம்” என கூறியுள்ளார்.