பிக் பாஸ் பாவ்னி அளித்த ஷாக்கிங் செய்தி!

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5வில் கலந்துகொண்டு டாப் 3ல் இடம் பிடித்து பிரபல்யம் அடைந்தவர் நடிகை பாவ்னி ரெட்டி. இவர் சின்னத்தம்பி சீரியல் மூலம் தமிழில் சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு  அண்மையில் தனக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டிருந்த செய்தி ரசிகர்கள் ஷாக்காகியது.

அதே போல் மீண்டும் ஒரு ஷாக்கிங் செய்தி ஒன்றை கூறியிருக்கிறார் நடிகை பாவ்னி ரெட்டி. ரசிகர்களுடன் சமீபத்தில் லைவ்  ஒன்றில் உரையாடிய பாவ்னியிடம், ரசிகர் ஒருவர் ”நீங்கள் எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறீர்கள்?“ என்று ரசிகர் கேள்வி கேட்க, இனி என் வாழ்க்கையில் திருமணம் என்பதே இல்லை என்றும், தன்னுடைய முழு கவனமும் இனி நடிப்பில் மட்டும் தான் என்றும் பதில் அளித்துள்ளார் நடிகை பாவ்னி ரெட்டி.