விஜய் டிவியில் தொகுப்பாளினியாக களமிறங்கிய அர்ச்சனாவின் மகள்!

90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்களில் ஒருவர் தான் அர்ச்சனா, இவர் பணிபுரியாத தொலைக்காட்சி இல்லை என்று கூறலாம். எல்லா தொலைக்காட்சிகளிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இடையில் கேமரா பக்கம் வராமல் இருந்த அவர் இப்போது படு பிஸியாக நிகழ்ச்சிகளில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இடையில் மூளையில் ஆபரேஷன் ஒன்று செய்யப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி, தொடர்ந்து ஷோக்கள் செய்து வரும் அர்ச்சனா விஜய்யில் புதிய ஷோ ஒன்றின் மூலம் தனது மகளுடன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன ஷோ, எப்போது தொடங்குகிறது என எந்த விவரமும் தெரியவில்லை.