சிம்புவுக்கு டாக்டர் பட்டம்! ஐசரி கணேஷ் ட்ரோல்களுக்கு கொடுத்த பதிலடி!

நடிகர் சிம்புவுக்கு சமீபத்தில் ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. பட்டமளிப்பு விழாவில் சிம்பு டாக்டர் பட்டம் வாங்கியபோது அப்பா டி. ஆர். ஆனந்த கண்ணீர் விட்டார்.

இந்த நிலையில் சிம்பு ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிப்பதன்  காரணமாக தான் இப்படி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என விமர்சனமும் எழுந்தது. இது பற்றி ஐசரி கணேஷ்  ஒரு வார இதழுக்கு  அளித்து இருக்கும் பேட்டியில், ”டாக்டர் பட்டம் யாருக்கு கொடுப்பது என முடிவு செய்ய 7 பேர் கொண்ட குழு இருக்கிறது, அவர்கள் தான் முடிவு செய்தார்கள்”  என கூறி இருக்கிறார்.

ஆறு வயதில் இருந்தே சினிமாவில் கலக்கு்ம் சிம்பு,  கோலிவுட்டில் கமலுக்கு அடுத்தபடியாக பன்முக திறமையுடன் இருக்கிறார். அதனால் தான் டாக்டர் பட்டம் கொடுக்க முடிவெடுத்தோம் என ஐசரி கணேஷ் தெரிவித்து உள்ளார்.