ஏப்ரல் 14 ஆம் திகதி Beast, KGF படத்துடன் மோதும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் திரைப்படம்!

2022 ஆம் ஆண்டு சினிமாவிற்கும் சினிமா ரசிகர்களுக்கும் நல்ல ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதனால் வலிமை, RRR, ராதே ஷ்யாம் என பிரமாண்ட திரைப்படங்கள் அனைத்தும்  ரிலீஸை தள்ளிவைத்தது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பீஸ்ட், KGF -2 என முக்கிய திரைப்படங்கள் சில ஏற்கனவே வெளியாகும் அறிவிக்கப்பட்ட நிலையில்,  தற்போது அந்த வரிசையில் பாலிவுட் நடிகர் அமீர் கானின் திரைப்படமும் இணைந்துள்ளது. பாலிவுட் நடிகர் அமீர் கானின் Laal Singh Chaddha திரைப்படம் எந்தவித மாற்றமுமின்றி ஏப்ரல் 14 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 14 ஆம் திகதி  Beast, KGF-2, Laal Singh Chaddha என மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது.