சீரியலில் கண்டிஷனை கூறிய பாரதி! கண்ணம்மா செய்தது என்ன?

”பாரதி கண்ணம்மா” விஜய்யில் ஹிட்டாக ஓடும் ஒரு தொடர். இதில் ஒரே ஒரு விஷயத்தை வைத்து இத்தனை வருடங்கள் சீரியலை ஓட்டிக் கொண்டு வருகின்றனர். கதை நகர்ந்ததை பார்த்து தொடர் முடியப்போகிறதோ என்று மக்கள் யோசிக்கவே ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இயக்குனரோ அதற்கு மாறாக  பழைய விஷயத்தையே மறுபடியும் மறுபடியும் பேசுகிறார்.

இது கொஞ்சம் மக்களுக்கு வெறுப்பை தருகிறது. கடந்த சில நாட்களாக புரொமோவில் வித்தியாசம் காட்டிய இயக்குனர் பாரதியின் கண்டிஷன் என்ற பெயரில் கதையில் கலகம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். ”ஆமாம்! நான் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று ஒத்துக்கொள் எல்லாவற்றையும் மறந்து நான் உன்னுடன் சந்தோஷமாக வாழ்கிறேன்” என்ற தனது கண்டிஷனை பாரதி கூற, இதைக்கேட்டதும் அவரது குடும்பத்தார் கடும் அதிர்ச்சியடைய கண்ணம்மா எதுவும் பேசாமல் கை எடுத்து கும்பிட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேளியுள்ளார்.