விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கும் விக்ரம்!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் மற்றும் கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரமின் சீயான் 61 ஆவது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். விக்ரம் நடிக்கும் அப்படத்தின் கதை முதலில் நடிகர் விஜய்க்காக பா.ரஞ்சித் எழுதியது என தகவல் பரவி வருகிறது.

அதன்படி காலா படத்திற்கு பிறகு ரஞ்சித் விஜய்யிடம் சூப்பர் ஹீரோ கதை ஒன்றை கூறியதாகவும், ஆனால் சூப்பர் ஹீரோ கதை விஜய் வேண்டாம் என்றதால் அப்படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது சீயான் 61 ஆவது சூப்பர் ஹீரோ திரைப்படம் என்றும் அது முதலில் விஜய்க்கு சொல்லப்பட்ட கதை எனவும் செய்தி பரவி வருகிறது.