அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது விஜய் பட நடிகையா?

அஜித் நடிப்பில் போனி கபூர்  தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.  இம்மாதம் வெளியாவதாக இருந்த இப்படம், கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிப்போய் உள்ள இந்நிலையில் விரைவில் ரிலீஸ் திகதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அஜித்தின் 61 ஆவது படத்தின் முதற்கட்ட வேலைகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில்  இப்படத்தை எச். வினோத் தான் இயக்கவுள்ளார்.  இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, பாலிவுட் கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிற இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவிடமும் அஜித்தின்  61 ஆவதுபடத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. நடிகை பூஜா ஹெக்டே தற்போது விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.