ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம்

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.

பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும்.

டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றிப்பெற்ற ஜெய்பீம் திரைப்படம், 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

இப்பட்டியலில் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர்’ ஆகிய இரண்டு இந்திய திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில் இறுதிப்பட்டியல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.