அஜித்தின் படம் தீபாவளிக்கு வெளியாகிறது!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்திருக்கும் படமான வலிமை , பொங்கலுக்கு திரைக்கு வர இருந்த  நிலையில், கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் தனது 61 ஆவது படத்திலும் இணையப் போகும் அஜித்குமார், வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக  நடித்துள்ளார். மேலும்  அந்த 61 ஆவது படத்தில் இன்னும் உடல் எடையைக் குறைத்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக தற்போது அவர் தீவிர சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அஜித்தின் 61 ஆவது படத்தின் பூஜை பெப்ரவரி மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இப்படத்திற்கான செட் போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அத்தோடு மார்ச் மாதத்தில் அஜித்தின் வலிமை படம் திரைக்கு வரும் நிலையில் அடுத்து நடிக்கவிருக்கும் 61 ஆவது படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.